Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திரிசங்கு நிலையைப் பறைசாற்றும் அமைச்சரவை மாற்றம்

In இன்றைய பார்வை
Updated: 08:49 GMT, Feb 25, 2018 | Published: 08:49 GMT, Feb 25, 2018 |
0 Comments
1171
This post was written by : Arun Arokianathan

மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் சப்பென முடிந்தவிட்டிருக்கின்றதையே அரசியல் அவதானிகள் மட்டுமன்றி சாதாரண மக்களின் உணர்வுவெளிப்பாடுகளும் கோடிட்டுக்காண்பித்துகின்றது.

உள்ளூராட்சித் தேர்தலில் அடைந்த பெருந்தோல்வியையடுத்து நிலைமையை சூதாகரித்துக்கொண்டு, அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப அமைச்சரவை மாற்றத்தை ஒரு ஆரம்பப்புள்ளியாகப் பயன்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு புஷ்வாணமாகிவிட்டுள்ளதெனக் கூறினால் மாற்றுக்கருத்துக்கள் அரிதாகத்தான் இருக்கும்.

சட்டம், ஒழுங்கு விவகாரத்திற்கு பொறுப்பான அமைச்சு, முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்படும் என்ற விடயம் இம்முறை அமைச்சரவை மாற்றத்தின் மிகவும் முக்கிய பேசுபொருளாக விளங்கியது. ஆனால் இறுதி நேரத்தில் அது சாத்தியமாகமல் போயிருப்பதானது அரசாங்கத்திற்குள் காணப்படும் இழுபறி நிலையை தெளிவாகக் காண்பித்துநிற்கின்றது.

நல்லாட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இருகட்சிகளும் ஒன்றையொன்று முழுமையாக நம்புவதற்கு தயாராகவில்லை என்பதை இது காண்பித்துநிற்கின்றது. உள்ளூராட்சித் தேர்தல் பிரசார காலத்தில் தீவிரம் பெற்று தேர்தல் படுதோல்வியை அடுத்து உச்சம் பெற்றதான ஐக்கிய தேசியக்கட்சி -ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பூசல் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை என்பதையும் இது காண்பித்துநிற்கின்றது.

சரத் பொன்சேகாவிற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சை வழங்காது பின்னடித்த ஜனாதிபதி சிறிசேன, கடைசியில் யாரைப் பிரதமர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்ற முனைப்புடன் கடந்த சில வாரங்களாக செயற்பட்டாரோ அவருக்கே மேலும் ஒரு அமைச்சை அதுவும் முக்கியமான அமைச்சை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டமை இலங்கையின் அரசியலில் காணப்படும் திரிசங்குநிலையைப் பறைசாற்றிநிற்கின்றது.

யாரைப் பலவீனப்படுத்தவேண்டும் பதவியில் இருந்து அகற்றவேண்டும் என ஜனாதிபதி விரும்பினாரோ அவரை பொலிஸுக்கு நேரடிப் பொறுப்பான அமைச்சை வழங்கி பலப்படுத்தயிருக்கின்றார் ஜனாதிபதி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg