Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முத்தரப்புத் தொடரில் இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி!

In கிாிக்கட்
Updated: 10:09 GMT, Feb 25, 2018 | Published: 10:09 GMT, Feb 25, 2018 |
0 Comments
1347
This post was written by : Litharsan

இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ரி-20 தொடரில் இந்திய அணியில் 4 இளம் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், சர்துர் தாஹூர் ஆகிய இளம் வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

டோனி மற்றும் விராட் கோஹ்லி உட்பட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் முத்தரப்புத் தொடருக்கு இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்திய அணியில் ரோகித் சர்மா (அணித்தலைவர்), தவான் (துணை தலைவர்), லோகேஷ் ராகுல், சுரேஸ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் காப்பாளர்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், அக்ஷர் பட்டேல், விஜய் சங்கர், சர்துர் தாஹூர், ஜயதேவ் உனத்கட், முகம்மது சிராஜ் மற்றும் ரிஷாப் பாந்த் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg