Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அந்த விடயத்தை என்னால் மன்னிக்க முடியாது – கங்குலி பேட்டி

In கிாிக்கட்
Updated: 10:53 GMT, Feb 25, 2018 | Published: 10:53 GMT, Feb 25, 2018 |
0 Comments
1195
This post was written by : Litharsan

கடந்த 2005 ஆண்டில் தன்னை அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கியதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் மன்னிக்க முடியாததாகவும் உள்ளதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற பேட்டி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இந்திய பயிற்றுவிப்பாளராக கிரேக் சப்பல் நியமிக்கப்பட்டபோது அவருக்கும் தனக்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாகவும், அதனைக் காரணம் காட்டி தன்னை அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தன்னை ஒரு வீரராகக் கூட அணியில் களமிறக்கவில்லை என்பதை நினைத்துப்பார்க்க முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் இச்சம்பவத்தை தன்னுடைய வாழ் நாளில் மறக்க முடியாத நாளாகத் தெரிவித்துள்ள கங்குலி தன் வாழ்வின் கொந்தளிப்பான அத்தியாயமாக அதனைக் கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg