Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் விரைவில் அமைச்சரவை மாற்றம் – ஜனாதிபதி

In இலங்கை
Updated: 12:32 GMT, Feb 25, 2018 | Published: 12:32 GMT, Feb 25, 2018 |
0 Comments
1189
This post was written by : Litharsan

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலும் விரைவில் அமைச்சரவை மாற்றம் நிகழும் என   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, “அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தற்போதைய அரசாங்கம் தனது கொள்கைகளை மேம்படுத்தி, அதன் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு சிறந்த சேவை வழங்கவுள்ளது.

நாட்டு மக்களும், நாடுமே எமது அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயமாகும். அந்த வகையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 10 அமைச்சுக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலும் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும்.

மேலும் புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.

அமைச்சரை மாற்றத்தின் பின்னரான அமைச்சுக்களின் விபரம்;

1. பிரதமர் ரணில் விக்ரமசிங்க – சட்ட ஒழுங்கு அமைச்சர்
  முன்னர்: தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு
2. லக்ஷ்மன் கிரியெல்ல – அரச தொழில் மற்றும் மலையக அபிவிருத்தி அமைச்சர்
 முன்னர்: உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
3. கபீர் ஹாசிம் – உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்.
  முன்னர்: அரச தொழில் மற்றும் அபிவிருத்தி அமைச்சு
4. ஹரீன் பெனாண்டோ – டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்.
  முன்னர்: டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதி அமைச்சு
5. ரவீந்திர சமரவீர – வனவிலங்கு மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சர்
  முன்னர்: தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு
6. பியசேன கமகே – இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
  முன்னர்: சட்ட, ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
7. சாகல ரத்நாயக்க – இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்
  முன்னர் : சட்ட, ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு
8 . அஜித் பி. பெரேரா – சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர்.
  முன்னர்: மின்வலும் மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு
9. ஜே.சி. அளவதுவள – உள் விவகார பிரதி அமைச்சர்.
  முன்னர் : அமைச்சு பதவி இல்லை
10. ஹர்ஷ டி சில்வா – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர்
  முன்னர்: தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சர்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg