Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுய உரிமைகளை மத்திய அரசு தடுக்கின்றது – வடக்கு முதல்வர்

In இலங்கை
Updated: 15:51 GMT, Feb 25, 2018 | Published: 15:51 GMT, Feb 25, 2018 |
0 Comments
1264
This post was written by : Litharsan

இந்த நாட்டின் பூர்வீக குடியாக இனம் காணப்பட்டுள்ள ஒரு சமூகம் தமது சுய உரிமைகளுடனும் வாழ்வியல் அடையாளங்களுடனும் மற்றும் சுய கௌரவத்துடனும் வாழ்வதனை மத்திய அரசாங்கமானது தடுக்கின்றதென வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த நடமாடும் சேவையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வட மாகாண சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன், மத்திய மற்றும் மாகாண சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர்கள், கிளிநாச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய முதலமைச்சர், “இந்த நாட்டின் பூர்வீக குடியாக இனம் காணப்பட்டுள்ள ஒரு சமூகம் தமது சுய உரிமைகளுடன், வாழ்வியல் அடையாளங்களுடன் மற்றும் சுய கௌரவத்துடன் வாழ்வதனை தடுத்து நிறுத்த கூடிய செயல்களையே மத்திய அரசு தொடர்ந்தும் செய்து வருகின்றது.

தெற்கு அரசியல்வாதிகள் வேண்டுமென்றே தமிழ் மக்களுடைய உயரிய சிந்தனைகள் பற்றித் தவறான கருத்துக்களை, தவறான முறையில் சிங்கள மக்களிடம் எடுத்து கூறி வருகின்றனர்.

சிங்கள மக்கள் இவ்வாறான சூழ்ச்சிகளிலே சிக்கித் தவிக்கின்றனர் . சுய இலாபம் கருதிப் பேசும் அரசியல்வாதிகளை வேற்றுமைப்படுத்தும் பேச்சுக்களை மக்கள் நம்பிவிடுகின்றனர்.

உண்மையில் தமிழ், சிங்கள மக்களுக்கிடையில் போட்டி பொறாமை வருவதில்லை. சுய இலாப அரசியலிற்காக எமது மக்களைத் திசை திருப்பிவிடுகிறார்கள்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதோடு மக்களிடையே நல்லெண்ணமும் சீர்குலைந்துள்ளது. அடாவடித்தனங்கள் மக்களிடையே விதைக்கப்பட்டுள்ளது. இந்நிலை மாற்றப்பட்டு சிங்கள மக்கள், தமிழ் மக்களின் பிரச்சினைகளை விளங்கிக்கொள்ள வழிவகுக்க வேண்டும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg