Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு மாகாண சபையை எள்ளி நகையாட இடம்கொடோம் – அனந்தி

In இலங்கை
Updated: 16:05 GMT, Feb 25, 2018 | Published: 16:05 GMT, Feb 25, 2018 |
0 Comments
1243
This post was written by : Litharsan

வடக்கு மாகாண சபையை எள்ளி நகையாடுகின்ற வகையிலோ அல்லது கிள்ளு கீரையாக கருதுவதற்கோ நாங்கள் இடம் கொடுக்க முடியாது என வட மாகாண சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் பேசுகையில், “எமது மாகாணம் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணமாகும். எனவே இந்த மாகாணத்திற்கு, ஏனைய மாகாணங்களிற்கு அரசு நிதி ஒதுக்குவது போன்று ஒதுக்கிவிட முடியாது.

இந்த மாகாணத்திற்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டால் தான் இந்த மக்களிற்கு வாழ்வில் மறு மலர்ச்சியை ஏற்படுத்த முடியும். அதுவே நல்லாட்சிக்கான அழைப்பாகவும் இருக்க முடியும்.

எமக்கு பழிவாங்கும் செயற்பாடுகள் இல்லை. ஆனால் வடக்கு மாகாண சபையை எள்ளி நகையாடுகின்ற வகையிலோ அல்லது கிள்ளு கீரையாக கருதுவதற்கோ நாங்கள் இடம் கொடுக்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg