Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகர் என்ற புகழ் மட்டும் அரசியலுக்கு சரிவராது – கருணாஸ்

In இந்தியா
Updated: 05:19 GMT, Feb 26, 2018 | Published: 04:31 GMT, Feb 26, 2018 |
0 Comments
1097
This post was written by : Varatharajan Yuganthini

பெரிய நடிகர் என்ற புகழ் மட்டும் அரசியலுக்கு சரிவராது. மக்கள் அவர்களை ஆதரிக்க வேண்டுமென, அமைச்சரான நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனநாயக நாடான இந்தியாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அவர்களை முதலில் மக்கள் ஆதரிக்க வேண்டும்.

நடிகர் விஜயகாந் அரசியலுக்கு வந்து, எதிர்க்கட்சி தலைவரும் ஆனார். அவரைப் போன்று இனிவரும் நடிகர்கள் தாக்குப் பிடிப்பார்களா? என்று தெரியவில்லை.

மேலும் , முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு ஓர் ஆண்டு பூர்த்தி அடைந்துள்ளதே தவிர, இதில் மக்களுக்கான சேவை ஏதும் செய்ய முடியாமல் இருக்கின்றது.

அத்துடன் இக்கட்சியிலுள்ள அமைச்சர்களின் கருத்துக்களுக்கு அதிகாரிகள் கூட மரியாதை கொடுப்பதில்லை. இதனால் இக்கட்சியிலுள்ள ஒருசில அமைச்சர்கள் டி.டி.வி. தினகரன் கட்சியை நாடிச் செல்லுகின்றார்கள்.

இதேநிலைமை தொடருமாக இருந்தால் இன்னும் நூற்றுக்கு மேற்பட்ட அமைச்சர்களும், அ.தி.மு.க விலிருந்து விலகிச் செல்வார்கள்” என, நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg