Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு கௌட்டாவில் யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிக்க துருக்கி வலியுறுத்து

In உலகம்
Updated: 12:05 GMT, Feb 27, 2018 | Published: 12:01 GMT, Feb 27, 2018 |
0 Comments
1166
This post was written by : Suganthini

சிரியாவின் கிழக்கு கௌட்டாவில் யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறு, துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.

சிரியாவின் அஃப்ரின் பிராந்தியத்தில் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக மோதலை முன்னெடுக்க துருக்கிய அரசாங்கம் விசேட பொலிஸ் படையினரை நேற்று (திங்கட்கிழமை) அனுப்பியுள்ள நிலையில், இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.

இருப்பினும், சிரியாவின் அஃரின் பிராந்தியத்தில் யுத்தநிறுத்தம் கடைப்பிடிக்கப்பட மாட்டாதென, துருக்கி தெரிவித்துள்ளது.

கிழக்கு கௌட்டாவில் மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளைக் கவனத்திற்கொண்டு, சிரியாவில் 30 நாள் யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிக்க ஐ.நா. பாதுகாப்புச்சபை கடந்த 24ஆம் அறிவித்தது. ஆனால், அஃப்ரின் பிராந்தியத்தில் யுத்தநிறுத்தம் கடைப்பிடிக்கப்பட மாட்டாதென, துருக்கி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், துருக்கிய ஜனாதிபதியைத் தொலைபேசி வாயிலாகத்; தொடர்புகொண்டு உரையாடிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், அஃப்ரின் பிராந்தியத்தில் யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ளார். அத்துடன், சிரியாவின் மனிதாபிமான நிலைவரம் மற்றும் மோதலில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பாக பிரான்ஸ் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பிரான்ஸ் ஜனாதிபதி கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg