Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பனிப்பொழிவால் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் : நால்வர் உயிரிழப்பு

In
Updated: 17:17 GMT, Feb 27, 2018 | Published: 15:09 GMT, Feb 27, 2018 |
0 Comments
1376
This post was written by : S.K.Guna

பிரித்தானியாவில் கடுமையான குளிருடன் கூடிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. -3° ற்கும் குறைவான வெப்பநிலை பரவலாக பலபிராந்தியங்களிலும் பதிவாகியுள்ள நிலையில் மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு கடுமையான குளிரும் பனிப்பொழிவும் இருக்குமென வானிலை அறிவிப்பு வெளியாகியிருந்ததுடன்   மஞ்சள்நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது .

இன்றையதினம் கடுமையான குளிர் காரணமாக பாடசாலைகள் பலவும் மூடப்பட்டுள்ளன. இதேவேளை ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட   ரயில்சேவைகளும்  தடைப்பட்டுள்ளதனால் பயணங்களை மேற்கொள்வதில் பொதுமக்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

கடுமையான பனிப்பொழிவினால் வீதிப்போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வாகன விபத்துக்கள் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். லிங்கன்ஷையர் பிராந்தியத்தில் மூன்றுபேரும் கேம்பிரிட்ஜ் பிராந்தியத்தில் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கென்ட், சர்ரே , சஃபோல்க் மற்றும் சசெக்ஸ் பிராந்தியங்களில் 10 சென்ரி மீற்றர் பனிப்பொழிவு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg