Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசுக்கு சவாலாகும் அம்பாறை சம்பவம்!

In இன்றைய பார்வை
Updated: 06:40 GMT, Feb 28, 2018 | Published: 06:40 GMT, Feb 28, 2018 |
0 Comments
1173
This post was written by : Arun Arokianathan

அம்பாறையில் முஸ்லிகளின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பது, பெயரிலேனும் எஞ்சியிருக்கின்ற நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை மேலும் வீழ்ச்சியடையாது காக்க உதவும். சிங்கள மக்களில் பெருமளவிலானவர்கள் தற்போதைய அரசாங்கத்திலுள்ளவர்களுடன் இல்லை என்பதை அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்கள் புலப்படுத்தியுள்ள நிலையில் இவ்வாறான அட்டூழியங்கள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கத்தவறின் நாளாந்தம் வீழ்ச்சியடைந்துவரும் சிறுபான்மையின மக்களின் ஆதரவையும் இந்த அரசாங்கம் விரைந்திழக்க வேண்டியேற்படும் என்பதில் சந்தேகமில்லை.

கடந்தபல மாதங்களாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு அதிலும் அதன் பிரதான பங்காளியான ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக பிணைமுறி மோசடிக்குற்றச்சாட்டுக்களை எழுப்பியபோது சிறுபான்மை மக்கள் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஊழல் மோசடிகள் குறித்த அக்கறை அற்றவர்களாக அவர்கள் இருப்பது இதற்கு காரணமல்ல மாறாக அதனை விடவும் பெரும் பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொண்டிருப்பதே காரணமாகும். அம்பாறையில் பெரும்பான்மையின காடையர் கூட்டத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை வெறியாட்டமானது சிறுபான்மையின மக்களின் இருப்பையே கேள்விக்குட்படுத்துவதாக இருக்கின்றது. தமது இருப்பு கேள்விக்குட்படும் இடத்தில் எவரும் கைகொட்டி மௌனிகளாக பார்த்துக்கொண்டிருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg