Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடும் பனிப்பொழிவு: வேல்ஸ், ஸ்கொட்லாந்தில் சுமார் 640 பாடசாலைகள் மூடப்பட்டன

In
Updated: 10:28 GMT, Feb 28, 2018 | Published: 07:40 GMT, Feb 28, 2018 |
0 Comments
1288
This post was written by : Suganthini

கடுமையான பனிப்பொழிவு காரணமாக வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய பகுதிகளில் சுமார் 640 பாடசாலைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதுடன், 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மேற்படி பகுதிகளில் மஞ்சல் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நாளைமறுதினம்வரை (வெள்ளிக்கிழமை) கடுமையான பனிப்பொழிவு காணப்படுமெனவும், பிரித்தானிய வானிலை நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பனிப்பொழிவு காரணமாக வேல்ஸில் சுமார் 240 பாடசாலைகளும் ஸ்கொட்லாந்தில் சுமார் 400 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

மேலும், பனிப்பொழிவு காணப்படும் பகுதிகளில் போக்குவரத்துத் தடங்கல் காணப்படுமென்பதுடன், கவனமான பயணத்தை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg