Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோர்வேயில் அரைத் தானியங்கித் துப்பாக்கிகளைத் தடைசெய்யத் தீர்மானம்!

In ஐரோப்பா
Updated: 08:31 GMT, Feb 28, 2018 | Published: 08:31 GMT, Feb 28, 2018 |
0 Comments
1081
This post was written by : Suganthini

நோர்வேயில் அரைத் தானியங்கித் துப்பாக்கிகளைத் தடைசெய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, சட்டவல்லுநரொருவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் துப்பாக்கிகளைத் தடைசெய்வதற்கான முன்மொழிவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், இதற்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளதாகவும், ஊடகமொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது.

நோர்வேயில் கடந்த 2011ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் திகதி, பொலிஸ் அதிகாரி போன்ற மாறுவேடத்தில் துப்பாக்கிதாரியொருவர் அரைத் தானியங்கித் துப்பாக்கியினால் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து இம்மாதம் 14ஆம் திகதி, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பாடசாலையொன்றில் தானியங்கித் துப்பாக்கியினால் பழைய மாணவரொருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 17 மாணவர்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக, அமெரிக்காவில் தானியங்கித் துப்பாக்கிகளைத் தடைசெய்வதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில், நோர்வேயும் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு முதல் அரைத் தானியங்கித் துப்பாக்கிகளைத் தடைசெய்வதற்குத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg