Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பன்மைத்துவம் தொடர்பான தேசிய சமாதான பேரவையின் பயிற்சிப்பட்டறை!

In இலங்கை
Updated: 04:28 GMT, Mar 1, 2018 | Published: 04:28 GMT, Mar 1, 2018 |
0 Comments
1048
This post was written by : Vithushagan

சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் எனும் தொனிப்பொருளில் தேசிய சமாதான பேரவை மற்றும், ஒப்பன் நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த விசேட பயிற்சிப்பட்டறை கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்கள் முழு நேரமாக நடைபெற்றுள்ளது.

தேசிய சமாதான பேரவையின் மாவட்ட நிகழ்ச்சித்திட்ட அலுவலகர் ஏ.மெடோசன் பெரேரா தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் குறித்த பயிற்சிப்பட்டறை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் ஏற்பட வேண்டிய நல்லிணக்கம் தொடர்பிலும், சமையங்களுக்கிடையிலும், மக்களுக்கிடையிலும் ஒற்றுமையினை ஏற்படுத்துதல் மற்றும் முரண்பாடுகளின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பயிற்சிப்பட்டறையில் பிராந்திய ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg