Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரசாயன ஆயுதங்கள் தம்மிடம் இல்லை என்கிறது சிரியா

In உலகம்
Updated: 05:11 GMT, Mar 1, 2018 | Published: 05:06 GMT, Mar 1, 2018 |
0 Comments
1180
This post was written by : Elakkiya

இரசாயன ஆயுதங்கள் தம்மிடம் இல்லை என்றும் அல் நுஸ்ரா மற்றும் டேஷ் போன்ற பயங்கரவாத குழுக்களே இத்தகைய ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் சிரியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான சிரிய தூதுவர் ஹூசம் எடின் ஆலா நேற்று (புதன்கிழமை) இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, இரசாயன ஆயதங்கள் மற்றும் நச்சு வாயுக்களை சிரியா எங்கு வேண்டுமானாலும் யார் மீதும் பயன்படுத்தலாம் என்ற கருத்தை கண்டனம் செய்வதாக தெரிவித்துள்ள அவர், சிரிய அரசாங்கம் மீதான இரசாயன ஆயுத பயன்பாடுகள் குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளார்.

அத்துடன், அனைத்து இரசாயன ஆயுதங்களையும் சிரிய அரசாங்கம் அதன் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்களின் முற்றுகைக்குட்பட்ட சிரியாவின் கிழக்கு ஹெளட்டாவில் இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான மோதல்களில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக  நெதர்லாந்து டென் ஹாக் நகரில் அமைந்துள்ள உலக இரசாயன ஆயுத கண்காணிப்பு குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் சிரியா சார்பில் மேற்படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இரசாயன ஆயுதங்கள் மீதான சர்வதேச தடை ஒப்பந்தத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு சிரியா கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg