Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம்: இஸ்லாமியர்களும் பங்கேற்பு

In இந்தியா
Updated: 08:54 GMT, Mar 1, 2018 | Published: 05:25 GMT, Mar 1, 2018 |
0 Comments
1110
This post was written by : Kemasiya

காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்தின் மூத்த சங்கராச்சாரியாரான ஜெயேந்திர சரஸ்வதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சி மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இன்று (வியாழக்கிழமை) வேதமந்திரங்கள் ஒலிக்க இவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜெயேந்திரரின் இறுதிச்சடங்கில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தேதோடு, இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இது தொடர்பில் நஷீர் என்னும் இஸ்லாமியர் ஊடகமொன்றிற்கு கருத்துரைக்கையில் ,

“ஜெயேந்திரர் மத வேறுபாடின்றி பழகுபவர். அவருடைய தேவைக்கான தளபாடங்களை நான் தான் செய்து கொடுப்பேன்.

அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு நாட்காலி செய்து கொடுத்தேன். மிகவும் சிறந்த மனிதர்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பொதுமக்களின் அணிதிரண்ட ஊர்வலத்தோடு, அனைவரது அஞ்சலிக்கு பின்னர் ஜெயேந்திரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg