Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீதியோர தாக்குதலில் ஐ.நா. அமைதிகாப்பு படையினர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 05:56 GMT, Mar 1, 2018 | Published: 05:56 GMT, Mar 1, 2018 |
0 Comments
1205
This post was written by : Elakkiya

மாலியில் இடம்பெற்ற வீதியோர தாக்குதலில் ஐ.நா. அமைதிகாப்பு படையினர் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் பலத்த காயமடைந்துள்ளதாக மேற்கு ஆபிரிக்க நாடுகளின் ஐ.நா. அமைதிகாப்பு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.

பொனி மற்றும்  Douentza   நகரங்களை இணைக்கும் வீதியூடாக சென்ற படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் நான்கு படையினர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்த படை வீரர்கள் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

இதற்கு முன்னதாக நேற்று முன்தினம் இடம்பெற்ற இதுபோன்றதொரு தாக்குதலில் ஆறு மாலி இராணுவ வீரர்கள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg