Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெண்பனியில் அழகாக காட்சியளிக்கும் லண்டன்

In
Updated: 06:49 GMT, Mar 1, 2018 | Published: 06:49 GMT, Mar 1, 2018 |
0 Comments
1256
This post was written by : Elakkiya

பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள அதிக பனிப்பொழிவு காரணமாக குறிப்பாக லண்டன் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குளிர் காலநிலையால் வெப்பநிலை பெருமளவில் குறைவடைந்துள்ளதுடன் நகர வாழ்க்கை சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.

வீதிகளிலும், மரங்களிலும் எட்டு சென்ரி மீற்றர் அளவில் பனி படந்துள்ளது.அதே போன்று ஆறுகளில் படர்கின்ற பனி மெல்லிய அடுக்கை உருவாக்கியுள்ளது. இவையாவும் காண்பதற்கு அழகாக காட்சியளிக்கின்ற போதிலும் மொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.

வீதிகள் வழுக்கும் தன்மையை கொண்டிருப்பதால் போக்குவரத்துக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு லண்டனில் இது அரிய வானிலையாக பதிவாகியுள்ளது. மத்திய லண்டனில் அதிகபட்ச வெப்பநிலையான மறை 2 செல்சியம் வெப்பநிலை அளவிடப்பட்டுள்ளது. எனினும் இக்காலநிலையை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

தேசிய வானிலை சேவை நிறுவனமான மெட் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம், கடந்த 1947 ஆம் ஆண்டில் லண்டன் அதிக பனிப்பொழிவை அனுபவித்தது. இது 20 ஆம் நூற்றாண்டில் மிக மோசமான பனிப்பொழிவாக அமைந்தது. கடந்த பெப்ரவரி மாதம் லண்டனின் சராசரி வெப்பநிலை மறை 1.9 டிகிரி செல்சியசாக இருந்தது. பெப்ரவரி மாத இறுதியில் மேலும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தில் மிக உயர்ந்த பனிப்பொழிவு எச்சரிக்கையான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் கிழக்கு மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்து, மத்திய பிரிட்டனில் ஆம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க ஸ்கொட்லாந்து, வேல்ஸில் சில பாடசாலைகள் இன்றும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg