Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பாக்தாத்திற்கு ரஷ்யா உதவி: ஈராக் அமைச்சர்

In ஐரோப்பா
Updated: 08:12 GMT, Mar 1, 2018 | Published: 08:11 GMT, Mar 1, 2018 |
0 Comments
1109
This post was written by : Elakkiya

பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான போரில் பாதுகாப்பை உறுதிசெய்வதில் பாக்தாத் ரஷ்யாவின் உதவியை பெறுவதாக ஈராக் வெளியுறவு அமைச்சர் இப்ராஹிம் அல் ஜஃபாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இருதரப்பினருக்கு இடையிலும் தகவல் பரிமாற்றம் வழக்கமான அடிப்படையில் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மொஸ்கோவில் நேற்று (புதன்கிழமை) செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதன்போது, “ரஷ்யா எமக்கு ஆதரவை வழங்கி வருகின்றது. நாம் தகவல்களை பரிமாறிக் கொண்டிருக்கிறோம். மேலும் பாதுகாப்பு துறையிலும் ரஷ்யா உதவி செய்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யாவுடன் பொருளாதார மற்றும் ஆற்றல் ஒத்துழைப்பை விரிபுபடுத்துவதற்கான விருப்பத்தையும் ஜஃபாரி வெளிப்படுத்தியுள்ளார். எந்த ஒரு நிறுவனத்துடனும் வர்த்தகத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு பாக்தாத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg