Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நைல் நதியை குறைகூறிய எகிப்து பாடகிக்கு சிறை

In உலகம்
Updated: 08:15 GMT, Mar 1, 2018 | Published: 08:15 GMT, Mar 1, 2018 |
0 Comments
1160
This post was written by : Arun Arokianathan

நைல் நதியின் சுத்தத்தை குறைகூறி கேலியாக பேசிய எகிப்து பாடகி ஷெரின் அப்தல் வஹாபிற்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி பாடல் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் மத்தியஸ்தராக செயற்படும் நாட்டின் பிரபல பாடகியாக இருக்கும் ஷெரின், நைல் நதி நீரை குடித்தால் தொற்று நோய் ஏற்படலாம் என்று ரசிகர்களுக்கு குறிப்பிட்டிருந்தார்.

அதனை விடவும் விலை உயர்ந்த கனிம நீரை குடிக்கலாம் என்று அவர் கேலியாக குறிப்பிட்டார்.

அதேபோன்று தனது பாடல் ஒன்றுக்காக மற்றொரு பாடகியான லைலா அமருக்கு எகிப்து நீதிமன்றம் ஒன்று இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

போலியான செய்தியை பரப்பிய குற்றச்சாட்டுக்காகவே ஷெரினுக்கு கெய்ரோ நீதிமன்றம் செவ்வாயன்று இந்த தண்டனையை விதித்துள்ளது. பிணையாக 5,000 எகிப்து பெளண்ட்களை செலுத்த உத்தரவிட்டிருக்கும் நீதிமன்றம் அவர் வழக்கு முடியும்வரை சிறையை தவிர்க்க மேலும் 10,000 பெளண்ட்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg