Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடவும் தயார்: ராஜேந்தர்

In இந்தியா
Updated: 15:49 GMT, Mar 1, 2018 | Published: 08:58 GMT, Mar 1, 2018 |
0 Comments
1182
This post was written by : Kemasiya

தேர்தலில் தி.மு.க. செயல்த் தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் சூழ்நிலை வந்தால் அதனை எதிர்கொள்ளவுள்ளதாக நடிகர் ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராஜா நகரில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்துரைத்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“தி.மு.க. தற்போது ஸ்டாலின் தி.மு.க.வாக மாறிவிட்டதாகவும். கருணாநிதியின் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டு வந்த தான் தற்போது கருவேப்பிலையாக தூக்கி எறியப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தி.மு.க. விசுவாசிகள் தூக்கி எறியப்படுவதாகவும், வெறும் முழக்கம் செய்பவர்களுக்கு மட்டுமே தி.மு.க.வில் இடம் கிடைப்பதாகவும் அவர் குற்றம் சாடியுள்ளார்”

இன்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு பலரும் வாழ்த்தினை தெரிவித்து வரும் நிலையில், ராஜேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg