Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்திலிருந்து உதிரிப்பாகங்கள் திருட்டு

In இலங்கை
Updated: 09:39 GMT, Mar 1, 2018 | Published: 09:39 GMT, Mar 1, 2018 |
0 Comments
1096
This post was written by : Litharsan

வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றின் டயர் மற்றும் மின்கலம் உட்பட்பட்ட உதிரிப்பாகங்கள் திருடப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து இன்று (வியாழக்கிழமை) ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, பேருந்தின் உரிமையாளர் வழமை போன்று தனது பேருந்தை வீட்டின் முன்னால் நிறுத்தி வைத்துள்ளார்.

வழமைபோன்று சேவைக்காக பேருந்தை இயக்க முற்பட்டபோது அதனை இயக்கமுடியாமல் இருந்துள்ளது. பேருந்தை பரிசோதித்தபோது பொருத்தப்பட்டிருந்த மின்கலம் மற்றும் மேலதிக டயர் என்பன திருடப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg