Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகின் மனச்சாட்சியை கேள்விக்குட்படுத்தும் சிரியா!

In இன்றைய பார்வை
Updated: 10:32 GMT, Mar 1, 2018 | Published: 10:29 GMT, Mar 1, 2018 |
0 Comments
1192
This post was written by : Arun Arokianathan

சிரியாவில் நடக்கும் படுகொலைகளுக்கு நீதிகோரி இன்றையதினம் தமிழர்களின் இதயபூமியான யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்காலில் மிகப்கொடூரமான அவலங்களைச்சந்தித்த எம் இனத்தவர்களுக்கு போரின் வலி என்னவென்பதை சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்தும் புரிந்துகொள்ளமுடியும். இதனால் தான் சிரியாவில் நடைபெறும் யுத்தம் குறித்து இணையவழித்தேடல் தளமான கூகுளில் அதிகமாக தேடியவர்களின் பட்டியலில் தமிழர்கள் முதலிடம் பிடித்திருக்கின்றனர் என்கின்றபோது எத்தனைதூரத்திற்கு அவர்கள் போரின் வடுக்களை இதயத்தில் சுமந்துநிற்கின்றனர் என்பது தூலம்பரமாகின்றது.

சிரியாவில் கடந்த 8 வருடங்களாக போர் நடந்து வருகிறது. 2012ல் தான் இந்த போர் உக்கிரமாக நடக்க ஆரம்பித்தது. தற்போது மீண்டும் உச்ச நிலையை அடைந்து இருக்கிறது

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் உலகம் முழுக்க இணைய வழியில் பயணித்து பெரும் உணர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளன. இந்த அப்பாவிக் குழந்தைகளின் இறப்புகளைக் கண்டு வருந்தும் அதேநேரம், அதன் பின்னணி அரசியல்களையும் அறிய வேண்டியது மிகவும் அவசியம்தான். “நாம் எந்த ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பதை நம் எதிரிதான் தீர்மானிக்கிறான்” என்றார் மாவோ.

அய்லானும், அஹ்மத்தும், ஒமரும், அல்-டிமாஸியும், பிராஸ் அப்துல்லாவும் சிரிப்பைத் தவிர வேறு எந்த பேராயுதத்தையும் ஏந்திவிடவில்லைதான். ஆனால், அவர்களை அழிக்க அந்த எதிரிகள் ஏன் இந்த நச்சுக் குண்டுகளை ஏந்தினார்கள் என்பது விடை காண வேண்டிய கேள்வி. தொடு திரையில் தெரியும் புகைப்படங்களை ஒரு நொடி அனுதாபத்தோடு தொட்டு நகர்த்தி வேலைகளைத் தொடரும் வாழ்க்கைக்கு நடுவில் இந்தக் கேள்விகளை எப்படி ஆராயப் போகிறோம்? இதற்கான தீர்வுகளை எப்படித் தேடப் போகிறோம்? மனித மாண்புகளை எப்படிக் காக்கப் போகிறோம்? மனிதத்தை எப்போது உணரப் போகிறோம்? உலகம் சிந்திக்க வேண்டிய விடயம் இது!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg