Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தப்பிய பொன்சேகா – வலையில் சிக்கப்போகும் கோட்டாபய!

In இலங்கை
Updated: 11:11 GMT, Mar 1, 2018 | Published: 11:11 GMT, Mar 1, 2018 |
0 Comments
2405
This post was written by : Puvanes

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலைக்கும், அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிற்கும் தொடர்புகள் இல்லை என புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சரத் பொன்சேகாவிற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி கொடுக்க தீர்மானிக்கப்பட்டதன் காரணமாகவே இவ்வாறான போலியான குற்றச்சாட்டுகள் பிறப்பிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகரவின் தலைமையிலான குழுவினர் மூலமாக லசந்த கொலைசெய்யப்பட்டுள்ளார் என்ற விபரங்கள் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், அமால் கருணாசேகரவை இராணுவ புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக நியமித்தது அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவே என்ற போதிலும், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கட்டளைகளுக்கமைவாகவே குறித்த பதவி வழங்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது.

அதேபோன்று, லசந்தவின் கொலைக்கும், பொன்சேகாவிற்கும் தொடர்பு உண்டு என குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் கண்டறியப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, லசந்த கொலையில் கோட்டாபயவை கைது செய்யப்படும் சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிப்பதோடு, கோட்டாபயவும் இதனை தெரிவித்திருந்தார்.

லசந்தவை கொலை செய்தது பொன்சேகாவின் குழுவினரே எனவும், தனக்கும் அந்தக் கொலைக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை எனவும் கோட்டாபய தெரிவித்து வருகின்றார்.

எவ்வாறாயினும், லசந்தவின் கொலை நடைபெற்றகாலத்தல் பாதுகாப்பு செயலாளராக அதிகாரங்களை வைத்திருந்த கோட்டாபய குறித்த கொலை தொடர்பாக பொறுப்பு கூறவேண்டியது அவசியமாகும் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg