Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவில் உறைபனி வானிலை நீடிக்கும் என எச்சரிக்கை

In
Updated: 17:29 GMT, Mar 1, 2018 | Published: 17:14 GMT, Mar 1, 2018 |
0 Comments
1523
This post was written by : S.K.Guna

பிரித்தானியாவில் கடுமையான குளிருடன் கூடிய உறைபனி வானிலை நீடிக்கும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்கு மிகக் கடுமையான குளிர் நிலவுவதுடன் பனிப்பொழிவும் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இங்கிலாந்தின் தென்மேற்கு பிராந்தியங்கள் மற்றும் வேல்ஸ் பிராந்தியங்களில் கடுமையான காற்று வீசுமெனவும் கூறப்படுகின்றது.

ஸ்கொட்லாந்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதனால் உறைபனி வெப்பநிலையில் 20 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக மக்கள் வீதிகளில் தவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

எனவே மக்கள் அநாவசியமான  பயணங்களை தவிர்த்துக் கொள்ளவேண்டுமென    ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிக்கொலா ஸ்ரேஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் நாட்டில் பல பாடசாலைகள் இயங்கவில்லை என்பதுடன் ரயில் சேவைகள், நிலக்கீழ் ரயில் சேவைகள், விமானப் போக்குவரத்துக்கள் என்பன தடைப்பட்டுள்ளன.

கடுமையான பனிப்பொழிவு உள்ளதனால் நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டு விபத்துக்களும் ஏற்படுகின்றன.

இந்த அசாதாரண காலநிலையில் மக்கள் பாவனைக்கு ஏற்றவகையில் எரிவாயுவினை வழங்குவதிலும் சிக்கல் நிலையுள்ளதாக எரிவாயு வழங்கும் நிறுவனங்களில்  ஒன்றான நஷனல் கிரிட் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg