Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊழல், மோசடிக்கு எதிரான கொள்கையில் எவ்வித மாற்றமும் கிடையாது – ஜனாதிபதி

In இலங்கை
Updated: 17:06 GMT, Mar 1, 2018 | Published: 17:06 GMT, Mar 1, 2018 |
0 Comments
1088
This post was written by : Litharsan

ஊழல், மோசடிக்கு எதிரான தமது கொள்கையில் எவ்வித மாற்றமும் கிடையாது என்றும் மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை மோசடிகள் இடம்பெறாத வகையில் உரிய முறையிலும் வெளிப்படைத் தன்மையுடனும் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவை கிரித்தலே குடியேற்றத்தில் உள்ள கனிஷ்ட வித்தியாலயத்தின் புதிய வகுப்பறை கட்டிடத்தை இன்று (வியாழக்கிழமை) மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து ஜனாதிபதி உரையாற்றுகையில், “நாட்டின் விவசாய சமூகத்திற்கு முன்னைய எந்த அரசாங்கமும் மேற்கொள்ளாத நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி உலர் வலயத்தில் 2400 குளங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டம் இவ்வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அந்தவகையில் பொலன்னறுவை மாவட்டத்தில் மட்டும் 123 குளங்கள் புனரமைக்கப்படுகின்றன. 60 வருடங்களுக்கும் மேலாக மக்கள் முகங்கொடுத்த நீர் தொடர்பான பிரச்சினைகள் இவ்வருட இறுதிக்குள் நிரந்தரமாக தீர்த்துவைக்கப்படும்.

அதேபோன்று மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை மோசடிகள் இடம்பெறாத வகையில் உரிய முறையிலும் வெளிப்படைத் தன்மையுடனும் நடைமுறைப்படுத்தவுள்ளன. அத்துடன் ஊழல், மோசடிக்கு எதிரான எமது கொள்கையில் எவ்வித மாற்றமும் கிடையாது.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg