Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லாட்சி அரசாங்கம் கொடூரமாக செயற்படுகின்றது : மஹிந்த

In இலங்கை
Updated: 04:54 GMT, Mar 2, 2018 | Published: 04:49 GMT, Mar 2, 2018 |
0 Comments
1124
This post was written by : Vithushagan

விவசாயிகளை விரட்டி விரட்டி அடிக்கும் அளவிற்கு நல்லாட்சி அரசாங்கம் கொடூரமாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலை கால்டன் இல்லத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பௌர்ணமி தின மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ”விவசாயம் செய்வதற்கு தேவையான நீரைக் கோரி நின்ற விவசாயிகள் துரத்தி துரத்தி அடிக்கப்படுகின்றனர். நீர் கேட்ட பெண்கள் உள்ளிட்ட 60 இற்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த காரணங்களினாலேயே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு மக்கள் வாக்களித்தனர். பிரதமருக்கு அரசாங்கத்திற்கு உள்ளேயே வரவேற்பு இல்லாத நிலைமை நீடித்து வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg