Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

In இந்தியா
Updated: 06:43 GMT, Mar 2, 2018 | Published: 06:26 GMT, Mar 2, 2018 |
0 Comments
1231
This post was written by : Yuganthini

தற்போது நிலவும் வறட்சி காலநிலைக் காரணமாக காவிரியிலிருந்து நீரினை வழங்க வேண்டுமெனக் கூறி, சாலை மறியல்  போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று(வெள்ளிக்கிழமை) திருச்சி நெடுஞ்சாலையில் 18 கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தங்களுடைய பிரச்சினை தொடர்பாக பொதுபணித்துறை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்   கோரிக்கைகளை முன்வைத்ததோடு  கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தாம்  தெரியப்படுத்தியதாகவும், எனினும் இவ்விடயம் தொடர்பில் எந்தப் பதிலும் வழங்கவில்லையென அதிகாரிகள்,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள  விவசாயிகளிடம்  தெரிவித்துள்ளனர்.

தங்களுடைய பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத் தரும் வரை மறியல் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg