Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெய்மருக்கு சத்திர சிகிச்சை: மூன்று மாதங்களுக்கு ஓய்வு

In உதைப்பந்தாட்டம்
Updated: 09:06 GMT, Mar 2, 2018 | Published: 09:06 GMT, Mar 2, 2018 |
0 Comments
1176
This post was written by : Anojkiyan

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதால், அவர் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு எந்த போட்டிகளிலும் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் பிரபல கழக அணியான, பரிஸ் செய்ண்ட் ஜேர்மெய்ன் எப்.சி. அணிக்காக விளையாடிவரும் நெய்மர், லிக்யூ தொடரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மார்செய்ல் அணிக்கு எதிரான போட்டியின்போது, காலில் காயம் ஏற்பட்டதால் போட்டியின் பாதியிலேயே விலகினார்.

இந்நிலையில், பரிசோதனையில், கால்பாதத்தின் மேல்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால், அந்த காயத்திற்கு அவருக்கு நாளை (சனிக்கிழமை) சத்திர சிகிக்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் அவருக்கு மூன்று மாதங்களுக்கு அவருக்கு ஓய்வு தேவைப்படுகின்றது.

ஆகையால், சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முக்கிய போட்டியாக எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள, ரியல் மெட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் நெய்மர் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகளின் முதல் போட்டியில், ரியல் மெட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் நெய்மர் விளையாடாமல் போனால் பரிஸ் செய்ண்ட் ஜேர்மெய்ன் அணியின் வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg