Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல் பிரபலங்களின் ஹோலி பண்டிகை: மக்களை வாழ்த்தினார் ஜனாதிபதி

In இந்தியா
Updated: 11:20 GMT, Mar 2, 2018 | Published: 09:58 GMT, Mar 2, 2018 |
0 Comments
1113
This post was written by : Kemasiya

ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தமது வாழ்துக்களை தெரிவித்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) வட இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் தமது வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் கூறுகையில்,  “மக்களின் வாழ்வில் அமைதியும், வளமும் பெருக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேபோல், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறுகையில், “குளிர்காலம் முடிவடைந்து வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலி பண்டிகை அன்று மக்கள் அனைத்து வளமும் பெற வேண்டும்” என கூறியுள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், “நாட்டு மக்களுக்கு ஹோலி வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்”

இதேவேளை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த ஆண்டுக்கான தனது ஹோலி பண்டிகையை இத்தாலி நாட்டில் உள்ள தனது பாட்டி வீட்டில் கொண்டாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவிலேயே “இந்தாண்டு ஹோலி பண்டிகையை டெல்லியில் கொண்டாடாமல் இத்தாலி செல்ல திட்டமிட்டுள்ளேன். ஹோலி விடுமுறைக்கு 93 வயதான எனது பாட்டியை சந்திக்க இத்தாலி செல்லப் போகிறேன். அவரை சந்திக்க ஆர்வமாக உள்ளேன். இந்த எதிர்பாராத பயணம் எனது பாட்டியை வியப்பில் ஆழ்த்தும். அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான கொண்டாட்டமாக இந்த ஹோலி பண்டிகை அமையட்டும்’” எனத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் பிரமுகர்களும் தமத ஹோலிப் பண்டிகையை சிறப்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg