Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அசர்பைஜான் போதை மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து- 30 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 10:40 GMT, Mar 2, 2018 | Published: 10:40 GMT, Mar 2, 2018 |
0 Comments
1181
This post was written by : Elakkiya

அசர்பைஜானில் செயற்பட்டுவரும் போதை மறுவாழ்வு மையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசர்பைஜான் நாட்டின் தலைநகரான பாகுவில் அமைந்துள்ள குறித்த போதை பொருள் மறுவாழ்வு மையத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 30 க்கும் மேற்பட்டோர் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பலர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் அசர்பைஜான் பொலிஸார் தீவிர விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg