Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவுதி இளவரசரின் வருகைக்கு பிரித்தானிய மக்கள் கடும் எதிர்ப்பு!

In
Updated: 10:46 GMT, Mar 2, 2018 | Published: 10:46 GMT, Mar 2, 2018 |
0 Comments
1125
This post was written by : Anojkiyan

சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மட் பின் சல்மானின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரித்தானியாவில் உள்ள சில சமூக அமைப்புகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

இளவரசர் சல்மானின் விஜயத்தை இரத்துச் செய்யக் கோரி, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்ட மனுவொன்றை பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அனுப்பிவைத்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சவுதியில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும் அங்கு 2017ஆம் ஆண்டில் மட்டும் நூற்றுக்கும் மேலானவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துமே இளவரசரின் வருகைக்கு பிரித்தானிய மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகின்றது.

சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மட் பின் சல்மான், எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதி பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயின் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg