Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதாவின் உருவச்சிலை சர்ச்சைக்கு ஒரு வாரத்தில் தீர்வு

In இந்தியா
Updated: 11:21 GMT, Mar 2, 2018 | Published: 11:20 GMT, Mar 2, 2018 |
0 Comments
1139
This post was written by : Yuganthini

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச்சிலை ஒரு வாரத்திற்குள் புனரமைக்கப்படுமென, அச்சிலையின் வடிவமைப்பாளர் பிரசாந் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் சிலை தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முக அமைப்பை போன்று 3 மாதிரிகளை வடிவமைத்து, அ.தி.மு.கவின் தலைமை நிர்வாகிகளிடம் ஒப்படைத்துள்ளேன்.

அவர்கள் இவ்விடயத்தில் தீர்மானித்ததன் பின்னர் சரியான முக அமைப்பு பொருத்தப்படும்.

எவ்வாறாயினும் ஒருவாரத்திற்குள் ஜெயலலிதாவின் சிலையில் மாற்றம் கொண்டவரப்படும்” எனவும் பிரசாந் குறிப்பிட்டுள்ளார்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அ.தி.மு.கவினால் திறந்து வைக்கப்பட்ட உருவச் சிலை ஜெயலலிதாவின் முகம் போன்று இல்லையென சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg