Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்த நாட்டின் எதிர்காலம் சிறக்க வேண்டுமானால் …

In இன்றைய பார்வை
Updated: 13:56 GMT, Mar 2, 2018 | Published: 13:56 GMT, Mar 2, 2018 |
0 Comments
1124
This post was written by : Arun Arokianathan

தமிழர்கள் என்ற காரணத்திற்காக அவர்களைப் பயங்கரவாதிகளாக முத்திரை குத்திய காலப்பகுதி போர்க்காலத்தில் மிகவும் உக்கிரமாக காணப்பட்டது. அண்மையில் தியத்தலாவயில் இடம்பெற்ற பஸ் குண்டுவெடிப்பிற்கு தமிழர்களே காரணம் என்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டதன் பின்னிலையிலும் தமிழர்கள் தொடர்ப காணப்படுகின்ற பாரபட்ச மனப்பான்மையே காரணமாகும்.

பெரும்பான்மை சமூகத்தினரின் அந்த எண்ண ஓட்டத்தில் பெரும் மாற்றம் ஏற்படவில்லை என்பதையே இது புலப்படுத்தி நிற்கின்றது.

இந்த நிலையில்  தியத்தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் குண்டுவெடிப்பு விபத்து தொடர்பாக இராணுவ வீரர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் தமிழர்கள் மீது சந்தேகம் வெளியிட்டவர்களை வெட்கித்தலைகுனிய வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழர்களுடன் நாட்டின் அரச அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள எள்ளளவும் மனங்கொண்டிராத, சிங்கள பௌத்த வரட்டுப் பெருமையில் உழலும் கடும்போக்காளர்ளே நாட்டின் அனைத்துப்பிரச்சனைகளையும் தமிழர்கள் மீது பழியைப் போட்டு தப்பிவிட முனைகின்றனர் என்பது வெள்ளிடைமலையாகும்.

இந்த நாட்டில் உண்மையான சமாதானமும் சுபீட்சமும் எதிர்காலத்தில் மலரவேண்டுமானால் தமிழர்கள் மீதான சந்தேகக் கண்ணோட்டத்தை களைந்து சமத்துவமாகவும் கௌரவமாகவும் நடத்தப்படத்தக்க வகையிலான உறுதிமிக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg