Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹோலிப் பண்டிகையில் மூழ்கிய ரஜினிகாந்த் குடும்பம்

In சினிமா
Updated: 05:26 GMT, Mar 3, 2018 | Published: 05:25 GMT, Mar 3, 2018 |
0 Comments
1155
This post was written by : Velauthapillai Kapilan

ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தனது குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய ஒளிப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது, வட மாநில இந்து மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு வண்ணமையமான பண்டிகை என்பதோடு, பக்த பிரகலாதன் கதையுடன் ஹோலி பண்டிகைக்கு தொடர்புடையதாக சொல்லப்படுகிறது.

ஸ்ரீ மன் நாராயணனின் நாமத்தை உச்சரித்த பக்த பிரகலாதனை கொல்வதற்காக தீயில் இறங்கி ஹோலிகா என்ற அரக்கி தீயிலே மாண்டுபோனால், பக்த பிரகலாதன் சாதரணமாக எழுந்து வருவது போல தீயில் இருந்து எழுந்து வந்தார். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது என புராணக்கதைகள் சொல்கின்றன.

இந்த நிலையில் ரஜினிகாந்த் அவரது குடும்பத்துடன் ஹோலி கொண்டாடியதை சௌந்தர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg