Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெனீவாவில் கடும் பனிப்பொழிவு

In ஐரோப்பா
Updated: 05:05 GMT, Mar 3, 2018 | Published: 05:05 GMT, Mar 3, 2018 |
0 Comments
1151
This post was written by : Suganthini

சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் நிலையில், போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதுடன், கடும் காற்றும் வீசியுள்ளது. இந்நிலையில், வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதால், போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. வழக்கமான 20 நிமிடங்கள் பிடிக்கும் பயணத்துக்கு தற்போது சுமார் 40 நிமிடங்கள் பிடிப்பதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இருப்பினும், விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அதிகாரிகள், வீதிகளின் நிலைமையைக் கவனத்திற்கொண்டு அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், எதிர்வரும் 3 தினங்களுக்கு மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, அந்நாட்டு வானிலை நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg