Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போனோர் அலுவலகம் குறித்து முக்கிய அறிவிப்பு!

In இலங்கை
Updated: 08:11 GMT, Mar 3, 2018 | Published: 07:21 GMT, Mar 3, 2018 |
0 Comments
1286
This post was written by : Varshini

காணாமல் போனோர் அலுவலகத்தின் பிராந்திய செயலகங்களையும் அமைக்கும் வகையில், காணாமல் போனோர் பணியக சட்டம் இடமளிக்கின்றதென தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

சுமார் இரண்டு வருடங்களாக இழுபறியில் காணப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்திற்கு, கடந்த வாரம்  உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதோடு, அதன் செயற்பாடுகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த அலுவலகத்தின் கிளை செயலகங்களை சம்பந்தப்பட்ட பகுதிகளான வடக்கு கிழக்கிலும் அமைக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் ஏற்கனவே கோரிவந்தனர்.

இந்நிலையில், அதற்கான சட்ட ஏற்பாடுகள் காணாமல் போனோர் பணியக சட்டத்தில் காணப்படுவதாக சிவஞானசோதி சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு, குறித்த செயலகங்களை அமைப்பது குறித்து காணாமல் போனோர் அலுவலக ஆணைக்குழு தீர்மானிக்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg