Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாணவர்களுக்கு இலவச பேரூந்து சேவைகளை வழங்க கோரி இளைஞர்கள் மலைப்பயணம்!

In இலங்கை
Updated: 10:07 GMT, Mar 3, 2018 | Published: 10:07 GMT, Mar 3, 2018 |
0 Comments
1071
This post was written by : Anojkiyan

இலங்கையில் பாடசாலை சீருடை அணிந்த அனைத்து மாணவர்களுக்கும் இலவச போக்குவரத்து சேவையினை வழங்க வேண்டும் என கோரி வவுனியாவில் இருந்து இரு இளைஞர்கள் இன்று (சனிக்கிழமை) பீதுறுதாலகால மலை நோக்கி மோட்டார் சைக்கிள் பயணத்தினை மேற்கொள்கின்றனர்.

வவுனியா, இளைஞர்களான த.பிரதாபன் மற்றும் ம.இமையவன் ஆகிய இரு இளைஞர்களுமே இவ்வாறு சாதனைப்பயணமொன்றினை இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா-வைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு முன்பாக இருந்து ஆரம்பித்தனர்.

656 கிலோ மீற்றர் தூரம் செல்லவுள்ள இவர்கள் பீதுறுதாலகால மலையில் கொடியொன்றினை நாட்டி மாணவர்களுக்கான இலவச பேரூந்து சேவையினை இலங்கை அரசு ஏற்பாடு செய்து வறிய மாணவர்களின் கற்றலுக்கு மேலும் ஊக்குவிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைப்பார்கள்.

கலாநிதி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர்கள் ப.சத்தியலிங்கம், எம்.தியாகராசா, தமிழருவி த.சிவகுமாரன் உட்பட பலரும் கலந்துகொண்டு வழியனுப்பி வைத்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg