Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவில் கடுமையான பனிப்பொழிவு: போக்குவரத்தில் தடங்கல்

In உலகம்
Updated: 12:25 GMT, Mar 3, 2018 | Published: 12:25 GMT, Mar 3, 2018 |
0 Comments
1130
This post was written by : Suganthini

சீனாவில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவைத் தொடர்ந்து ஹைலோங்ஜியாங் ((Heilongjiang) மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேற்படி மாகாணத்தின் மூடாங்ஜியாங் (Mudanjiang) நகரிலுள்ள அனைத்து நெடுஞ்சாலைகளும் இன்று (சனிக்கிழமை) காலை முதல் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பல வாகனங்கள் வீதிகளில் சிக்கியுள்ளன.

சீனாவில் கடந்த புதன்கிழமை முதல் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் நிலையில், வீதிகள் பனிக்கட்டியால் உறைந்துள்ளன.

இதேவேளை, வானிலை தொடர்பான தகவல்களை அறிந்துகொண்டு பயணிகள் தமது பயணத்தைத் தொடர வேண்டுமென்று கேட்டுக்கொள்வதுடன், வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதால் சாரதிகள் அவதானமாக வாகனங்களைச் செலுத்த வேண்டுமெனவும், அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், வீதிகளில் உறைந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் நகரத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg