Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பாறை சம்பவத்தில் பொதுஜன பெரமுன கட்சிக்கு தொடர்பு இல்லை: விமலவீர திஸாநாயக்க

In இலங்கை
Updated: 13:26 GMT, Mar 3, 2018 | Published: 13:26 GMT, Mar 3, 2018 |
0 Comments
1194
This post was written by : Anojkiyan

அம்பாறை தாக்குதல் சம்பவத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் பொறுப்புகளில் இருக்கும் யாருக்கும் தொடர்பு இல்லையென திகாமடுல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைவர்களை பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் காப்பாற்ற முனைவதாக வெளியான செய்திக்கு இன்று (சனிக்கிழமை) பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அம்பாறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைவர்களை நாம் காப்பாற்ற முயற்சிப்பதாக கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை. அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலைமையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட சிறு மோதல் சம்பவம் மத ஸ்தானம் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு சென்றுள்ளது.

இது மேலும் பரவாமல் நாம் தடுக்க வேண்டும். அதனை விட்டு விட்டு எரியும் நெருப்பில் என்னை ஊற்ற முயற்சிக்க கூடாது. அம்பாறையில் சமாதானம் மலரவே நாம் இந்த விடயத்தில் தலையிட்டுள்ளோம். அதை விடுத்து எவரையும் பாதுகாக்கும், காப்பாற்றும் நோக்கில் அல்ல. என்பதை எமது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.  குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றபோது குறித்த ஹோட்டலுக்குள் பொலிஸார் இருந்தனர். அதேபோல் தாக்கபட்ட மத ஸ்தானத்திற்கு மிக அண்மையில் பொலிஸ் நிலையம் உள்ளது. தாக்குதலை தடுத்து நிறுத்துவது பொலிஸாரின் கடமை. அதனை விடுத்து இந்த சம்பவத்தை அரசியலுடன், கட்சிகளுடன் முடிச்சு போடுவது ஒரு முட்டாள்த்தனமாகும்.

அது தவிர நான் இந்த அரசாங்கத்தின் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லை. எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷவாகும். அவரும் இந்த அரசாங்கத்தில் இல்லை. இவ்வாறு இருக்கத்தக்க நாங்கள் எவ்வாறு சட்டம் ஒழுங்கு விதி முறைகளுக்கு அப்பால் மூக்கை நுழைக்க முடியும். கடந்த காலங்களைப் போல இந்த விடயத்தையும் மஹிந்த ராஜபக்ஷவின் தலை மீது போட்டுவிட்டு சிலர் அரசியல் இலாபம் தேடும் முயற்சியாகவே நாம் இதனை பார்க்க வேண்டியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்ல முழு நாட்டிலும் அனைத்து இன மக்களும் மிகவும் நல்லுறவுடன் வாழ் வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg