Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாக்கி மாறிய கதை! – பைபிளின் பெருமை

In
Updated: 14:50 GMT, Mar 3, 2018 | Published: 14:50 GMT, Mar 3, 2018 |
0 Comments
1136
This post was written by : Puvanes

கடவுள் மீது நம்பிக்கையற்று வாழ்பவரையும் அவர் மீது நம்பிக்கை கொள்ளச் செய்து அவர் வழியை பின்பற்றி நடக்கச் செய்யும் பெருமை பைளியுக்கு உண்டு.

மாக்கி என்ற பதினேழு வயது வாலிபன் நன்கு படிக்க கூடியவனாக இருந்தமையால் அறிவியல் மூலமாக தான் இந்த உலகம் படைக்கப்பட்டது என்று சொல்லி கடவுள் இல்லை என்று தர்க்கம் செய்யும் நாத்திகனாக வாழ்ந்து வந்தான்.

இந்த நிலையில் மருத்துவ படிப்பிற்காக எளிமையான தனது குடும்பத்தை விட்டு பிரிந்து பட்டணத்திற்கு சென்றான். மாக்கி-யினுடைய இரட்சிப்பிற்காக அவனது தாயார் அநேக நாட்கள் ஜெபித்து வந்தார்கள்.

மகன் வெளியூர் செல்லும் பொழுது அவனுக்கு ஒரு பைபிளைக் கொடுத்து, தயவாய் அதை வாசிக்கும படியாக கேட்டுக்கொண்டார்கள். முதல் பக்கத்தை திறந்த மாக்கி, அதில் தனது பெயர் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு நகைப்புடன் மூடிவிட்டான்.

கல்லூரியிலும் நாத்திகனாகவே வாழ்ந்த மாக்கி அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து மது குடிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொண்டான். ஒருநாள் மது வாங்க பணம் இல்லாத காரணத்தால். தனது தாயார் தனக்கு பாசமாக கொடுத்த பைபிளை அடகு வைத்து மது அருந்தினான். நான்கு வருட மருத்துவ கல்லூரி வாழ்க்கை முடிந்தது.

எல்லோரைப்போலவே மாக்கியும் டாக்டர் ஆனான். அவன் ஒரு மருத்துவ மனையில் பணியாற்றின பொழுது, மரண தருவாயில் இருந்த ஒரு மனிதனுக்கு சிகிச்சை அளிக்க நேர்ந்தது.

மரிக்கும் தருவாயில் இருந்த மனிதன், தன்னுடைய சிறந்த விலையேறப்பெற்ற புத்தகத்தை கொண்டு வரும்படி கதறினான். மாக்கி அந்த புத்தகத்தை அவனுடைய பைகளில் தேடும்பொழுதே அந்த மனிதன் மரித்து விட்டான்.

மரித்த அந்த மனிதனுக்கு மரண நிலையிலும் விலையேறப்பெற்ற புத்தகமாக காணப்பட்ட அந்த புத்தகத்தைக் கண்டறிய ஆவல் கொண்டான் மாக்கி. மரித்த அந்த மனிதனுடைய எல்லா பைகளிலும் தேடுகையில், மாக்கிக்கு அந்த புத்தகம் கிடைத்தது.

ஆச்சரியம் என்னவென்றால், மதுவிற்காக மாக்கியால் அடகு வைக்கப்பட்ட அதே பைபிள் தான் அந்த பையில் இருந்தது. அறிவியலை விட மேலான சக்தி ஒன்று இருப்பதாக உணர்ந்த மாக்கி, அந்த பைபிளில் தனது தயார் கைப்பட எழுதிய அவனுடைய பெயர் இருந்தமையால், தனது வீட்டுக்கு எடுத்து சென்று ஓவ்வொரு பக்கமாக வாசிக்க தொடங்கினான்.

என்றாவது ஒருநாள் தன்னுடைய மகன் நிச்சயமாக இதை வாசிப்பான் என்று சொல்லி, விசுவாசத்தோடு அநேக வசனங்களில் அடிக்கோடிட்டு வைத்திருந்தார் அவனுடைய தாயார். அந்த வசனங்களை பல மணி நேரம் தியானிக்க தொடங்கினான் மாக்கி.

பின்னர் தேவனால் தொடப்பட்டு வல்லமையான ஊழியராக மாறி அநேகரை இரட்சிப்பிற்க்குள்ளாக நடத்தினான். ஒரு காலத்தில் அவன் வெறுத்த அதே வேத புத்தகம் பின்னாட்களில் அவனுடய விலைமதிக்க முடியாத புத்தகமாக மாறியது.

இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை (ஏசாயா 59:1) என்ற வசனத்தின் படியாக உங்கள் தொடர் விசுவாச ஜெபத்தின் மூலமாக, உங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது அநேக மக்களுக்கு கர்த்தர் இரட்சிப்பைக் கட்டளையிடுவார்.

அப்பொழுது “சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக, தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்” (சங்கீதம் 53:6)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg