Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அல்லாஹ் ஒருவனே! அவனுக்கு நிகராக எவருமில்லை…

In
Updated: 15:14 GMT, Mar 3, 2018 | Published: 15:14 GMT, Mar 3, 2018 |
0 Comments
1144
This post was written by : Puvanes

“அல்லாஹ் ஒருவனே! அவன் எந்த தேவையுமற்றவன். அவன் யாரையும் பெறவுமில்லை, அவன் யாராலும் பெற்றெடுக்கப்பட்டவனுமல்ல. அவனுக்கு நிகராக எவருமில்லை என்று நபியே! நீர் கூறுவீராக!” (அல்குர்ஆன் 112:1-4)

மனிதன் இயற்கையிலேயே நன்மை – தீமையை, உண்மை பொய்யை பிரித்தறியும், பகுத்தறிவு உடையவன். இப்பண்பு இறைவனின் அளப்பெரிய ஆற்றல்களை உணர உதவுவதுடன் வணக்கத்திற்குரியவன் ஓரிறைவனே என்பதை அறியவும் உதவுகிறது.

மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களை பின்பற்றும் அனைவரும் இந்த இயற்கைக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனம் கொண்டவர்களாக, இரட்சகனுக்கு கீழ்படிபவராகவே பிறக்கின்றனர்.

ஆனால் அவர்களின் பெற்றோரே அவர்களை தங்களின் கலாசாரத்தில், தாங்கள் சார்ந்துள்ள மதத்தின் அடிப்படையில் வளர்த்து விடுகின்றனர்.

இஸ்லாம் மனிதனால் உருவாக்கப்பட்ட மதமல்ல, மாறாக, அது இறைவனால் மனித சமுதாயத்திற்கு அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். இஸ்லாம் எனும் பெயர்கூட இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான்.

மனிதன் தன்னை இறைவனுக்கு மட்டுமே அடிமையாக்கி, அவன் வகுத்துத் தந்துள்ள வாழ்க்கை நெறியில் தனது வாழ்வை அமைத்துக் கொள்வதே இஸ்லாத்தின் முக்கிய நோக்கமாகும்.

இஸ்லாத்தை மனித சமூகத்திற்கு எடுத்துரைக்க பல இறைத்தூதர்கள் உலகின் பல பகுதிகளில், பல கால கட்டங்களில், பல மொழிகளில் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் இஸ்லாத்தை முறையே தத்தமது சமுதாயத்தவருக்கு போதித்தார்கள். இவ்வருகையின் இறுதியாகவும் உலகத்தாருக்கு அருட்கொடையாகவும் முஹம்மது(ஸல்) அவர்கள் சுமார் கி.பி 610 – ம் ஆண்டு மக்காவில் இறைதூதராக அனுப்பப்பட்டார்கள்.

இவர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ, குறிப்பிட்ட நாட்டினருக்கோ அன்றி ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள்.

அனைத்து இறைத்தூதர்களும் அவர்களின் சமுதாயத்தினருக்கு போதித்த இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை ”இறைவன் ஒருவனே! அவன் மட்டுமே படைக்கும் வல்லமை கொண்டவன். அவனே உங்களையும் நீங்கள் வாழும் பூமியையும் நீங்கள் காணும் கடல், மலை, விண், விண்மீன்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தையும் படைத்தான்.

வணக்கத்திற்கு தகுதியானவன் அவன் ஒருவன் மட்டுமே. அவனையன்றி வணங்கப்படும் அனைத்தும் அவனது படைப்பினங்களேயன்றி இறைவனல்ல. எனவே ஓரிறைவனான அவனை மட்டுமே வணங்குங்கள்! அவனது வழிகாட்டுதல்கள் இறைத்தூதர்களான எங்கள் மூலம் உங்களை வந்தடைகின்றன. அதனைப் பின்பற்றுங்கள்” எனப்தேயாகும்.

அல்லாஹ்! அவன் ஒருவனே! அவனுடைய திருப்பெயர்களும் தன்மைகளும் மனிதனால் தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்ல. அவன் எண்ணைக் கொண்டோ, – ஆண்பால், பெண்பால் போன்ற – பாலினத்தைக் கொண்டோ அறியப்படுபவனல்ல. அல்லாஹ் என்பது இரட்சகனின் பெயர்.

இது நேசமிகு நபி ஈஸா(அலை) அவர்களின் அராமிக் மொழியின் துணை மொழியாகும். அல்லாஹ் என்ற இத்திருப்பெயர் முதல் மனிதரும் முதல் இறைத் தூதருமான ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி இறைத்தூதரான முஹம்மது(ஸல்)அவர்கள் வரை எல்லா நபிமார்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

படைப்பாளனாகிய அல்லாஹ்வே சர்வசக்தியுடையவன், ஆதியானவன், அவனுக்கு முன்பு எதுவுமில்லை, அவனே நித்திய ஜீவன், நிலைத்திருப்பவன், அவனை யாரும் பெறவுமில்லை.

அவன் யாராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எதுவும் எவரும் இல்லை. அவனைத் தவிர உள்ள அனைத்தும் இறுதிநாளன்று அழிந்து விடும். மரணத்திற்குப் பின் நாம் அவனிடமே மீளவேண்டியுள்ளது. அங்கு அல்லாஹ்வால் நாம் அநீதி இழைக்கப்பட மாட்டோம். நீதமாய் நடத்தப்படுவோம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg