Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியா படுகொலைகளுக்கு எதிராக வவுனியாவில் அமைதிப் பேரணி

In இலங்கை
Updated: 15:24 GMT, Mar 3, 2018 | Published: 15:24 GMT, Mar 3, 2018 |
0 Comments
1172
This post was written by : Anojkiyan

சிரியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வவுனியாவில் அமைதிப் பேரணியொன்று இடம்பெற்றது.

வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த பேரணியில், பெருமளவான இளைஞர்கள் கலந்துக் கொண்டனர்.

சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்த குறித்த பேரணி, கண்டி வீதி வழியாக வவுனியா பழைய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சிரியாவில் நடக்கும் போரை ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேசமமும் உடனடியாக நிறுத்த வேண்டும், நிறுத்து நிறுத்து போரை நிறுத்து வேண்டாம் வேண்டாம் படுகொலைகள் வேண்டாம், வலி உணர்ந்ததால் வலி அறிகிறோம், அமெரிக்காவே வெளியேறு போன்ற பாதாதைகளையும் கோசங்களையும் எழுப்பியவாறு இளைஞர்கள் பேரணியில் கலந்துக்கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg