Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒருவருடம் எட்டியும் நீதி இல்லை- கதறும் உறவுகள்!

In இலங்கை
Updated: 16:25 GMT, Mar 3, 2018 | Published: 16:25 GMT, Mar 3, 2018 |
0 Comments
1142
This post was written by : Anojkiyan

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தினரால், திருகோணமலை – கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தை எட்டியுள்ளது.

இந்த ஒருவருட நிறைவில் பொறுப்புவாய்ந்தவர்களிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கப்பெறாத நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (சனிக்கிழமை) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் மாபெரும் கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில், பொது அமைப்புக்கள் உட்பட பல அமைப்புக்கள் இணைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும், இந்நிகழ்வில் கடத்தப்பட்டு, கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகளின் திருகோணமலை மாவட்ட தலைவி நாகேந்திரன் ஆசா, இதன்போது ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் மேற்கொண்டிருந்தார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg