Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போனவள்!

In
Updated: 01:46 GMT, Mar 4, 2018 | Published: 01:23 GMT, Mar 4, 2018 |
0 Comments
1071
This post was written by : srikkanth

அவன் கூறினான், “என் கண்களுக்கு நன்றி”

“ஏன்?” என்று கேட்க அவள் அருகினில் இல்லை அவன் அருகில்!

அவளுக்காகவும் அவனே கேட்டான்: “கண்களுக்கு எதற்கு நன்றி?”

“உன்னை காண வைத்தவை இந்தக் கண்கள் அல்லவா!” மனதிற்குள் குந்தியிருந்த அவளிடம்!

கந்தக வாசனைக்குள்ளும் கானகத்தின் வெறுகைக்குள்ளும் கருவாகி உருவான காதல் அது!

கண்கள் இல்லையானால் காதலுக்கு இத்தனை மரியாதை எங்கிருந்து கிடைத்திருக்கும்! கண்கள் இல்லையானால் காதலும் கிடையாது கண்ணீரும் வடியாது!
நாம் காதலிக்கும் ஒவ்வொன்றும் நம்மைவிட்டு தவறும்போதும்தானே கண்ணீர் கரை தாண்டுகின்றது.

மண்மேல் காதல் – பொருள் மீது காதல் – பொன் மீது காதல்- ஊர்மீது காதல் –  வீடுமீது காதல் – நாடுமீது காதல் மண்மீது காதல்!

உயிர் உடலை காதலிக்கிறது – அதனால்தான் உடலோடு ஒன்றியிருக்கிறது. பூமி சூரியனை காதலிக்கிறது – அதனால்தான் அதனை சுற்றி வலம் வருகின்றது.

அவளும் அவனை சுற்றி சுற்றியே வந்துகொண்டிருந்தாள்! – திடீரென ஒருநாள் காணாமல் போனாள்!

அவளும் அவனும் காதல் வளர்த்த கானகம் மௌனித்துக் கொண்ட மூன்றாம் நாள் – அவளும் காணாமல் போனாள்!

பெண்களை மேய்ந்து தீயில் எறிகிறார்களாம் – கர்ப்பிணிகளைகூட காம வேட்டையாடுகிறார்களாம்: ஊரெல்லாம் குசுகுசுப்பு!

தேடினான் அவளைஇ ஊரெல்லாம் தேடினான் அவளை! – தீ அவளை திண்டு விட்டதா அல்லது விடம் உண்டு அவள் தன்னை முடித்து விட்டாளா?

சோகம் அவனை துவள வைத்தது! பிரிவு அவனை பிளிந்து போட்டது! நினைவுகள் அவனை தாலாட்டியது – பிரிவு அவனை தத்தெடுத்துக் கொண்டது!
அவன் சோகத்தோடு குடித்தனம் நடத்தினான்! கூண்டுப் பறவையாய் அவளை மனக் கூண்டில் சுமந்து திரிந்தான்!

அன்றுதான் அந்த அதியசம் நிகழ்ந்தது! – காணாமல்போனவள் கண்முன்னே தோன்றினாள்!

நம்ப முடியாமல் கண்மூடித் திறந்து பார்த்தான்!

அவனையறியமலே, அவன் விழிகள் அவளின் கால்ளுக்கு தாவிப் போயின..!

கலகலவென்று அவள் சிரித்தாள்!

“பெண் என்றால் பேயும் இரங்கும் என்றுதான் கூறுவார்கள். பெண்ணையே பேயாக நினைக்கலாம் என்று கூறவில்லையே”

அவளே தான்! இது அவளே தான்!

மிடுக்கான பார்வை – கவசங்களுக்குள் மறைந்திருந்த எடுப்பான தோற்றம் – இரும்போடு நின்றபோதும் இனிமையாய் வார்த்தைகளுக்கு உருக்கொடுத்த அவளின் உதடுகள்!

இது அவளே தான்!

“நீ.. நீ… இத்தனை நாட்கள் எங்கிருந்தாய்?” – முதல் கேள்வியிலேயே சந்தேக விதை!

“புதுவாழ்விற்காய் என்னையும் அழைத்துச் சென்றார்கள்” அவள்கூற அவன் முகம் இருண்டது.

அவன் தடுமாறினான். தவித்துப் போனான். அவனுக்கு வியர்த்தது! எப்படிக் கேட்பது என்று தவித்தான். இறுதியில் கேட்டே விட்டான்!
“அவர்கள்.. அவர்கள் … உன்னை கற்பழித்தார்களா..?”

அவள் நெஞ்சில் தீ மூண்டது.

“நான் கற்போடுதான் இருக்கிறேன். கற்பை யாராலும் அழிக்க முடியாது” உறுதியான தொனி.

“உன்னை துவம்சம் செய்தார்களா.. அதைச் சொல்லு?” மீண்டும் வேறு விதமாக அதே கேள்வி.

“எப்படி என்னை துவம்சம் செய்ய முடியும். நான் நானாகவே இருக்கின்றேன்”

அவன் தன்னை மறந்து அவளை அறைந்தான்!

அவள் எதிர்பார்க்கவில்லை. கன்னத்தை தடவிக் கொண்டே அவன் கண்களை நேராகப் பார்த்தாள்.

“ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுவேன் என்றா நினைக்கிறாய்.
நீண்ட பிரிவோடு இருப்பாய் – கண்டதும் காதல் வளர்ப்பாய் – கனத்த என் இதயத்திற்கு ஆறுதல் அளிப்பாய் என்று எதிர்பார்த்தேன்.
காதலித்த குற்றத்திற்காக, உன் பேதலித்த் கேள்விகளுக்கும் பதில் சொன்னேன்!

முட்டாளே!
கற்பு என்பது உறுப்பு சம்மந்தப்பட்டதல்லஇ ஒழுக்கம் சம்மந்தப்பட்டது!

எங்கள் பெண்களை அவரகள் வேட்டையாடுவதாக கதையளந்து கொண்டிருக்கும் நீங்கள் தான்டா அவர்களைவிட மோசமானவர்கள்!”

மரியாதை தொலைந்தது. அவள் கோபம் அவனை அதிர வைத்தது.

“நான் காணாமல் போய் விட்டதாக கண்ணீர் விட்டாயே.. அதுவா காதல்?
அதன் பெயர் கோழைத்தனம்!

காணாமல்போன உன் காதலியை கண்டுபிடிக்க நீ கிளம்பியிருநதாள்இ அதுதான் காதல்!

இது வீரம் விளைந்த பூமி! இங்கு காதலும் வீரத்தோடு கலந்துதான் விளைய வேண்டும்!”

அவள் தலைநிமிர்த்தி அவனைக் கடந்தாள்!

கேடு வருவதும் நன்மைக்கே! நண்பரின் இயல்புகளை அளந்து பார்க்கும் அளவுகோல் அப்போதுதான் கிடைக்கிறது!
காதலனுக்கும் அது பொருந்தும்!

‘கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்”

அதிகாரம் – 80 குறள் – 796

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)