Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பணப்பலத்தைப் பயன்படுத்தியே பா.ஜ.க வெற்றி பெற்றது – சீதாராம் யெச்சூரி

In இந்தியா
Updated: 10:00 GMT, Mar 4, 2018 | Published: 07:35 GMT, Mar 4, 2018 |
0 Comments
1202
This post was written by : Yuganthini

பா.ஜ.க. தனது பணப்பலத்தைப் பயன்படுத்தி கம்யூனிஸ்டு கூட்டணிக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி வெற்றியடைந்துள்ளதென, கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் நேற்று (சனிக்கிழமை) இதனைத் குறிப்பிட்டார்.

‘திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கு பணப்பலமே காரணமாகும். இவர்கள் பணப்பலத்தைப் பயன்படுத்தி அனைவரையும தன்வசப்படுத்தியுள்ளார்கள்.

மேலும் இக்கட்சி எவ்வித தார்மீக நெறிமுறைகளையும் பின்பற்றாமல் பணப்பலத்தின் மூலமாக வெற்றி அடைந்துள்ளமையால், இதன் செயற்பாடுகள் மக்களையும் அதிகளவு பாதிப்பதற்கு வாய்ப்புள்ளது.

நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் குறித்து எமது கட்சி ஆய்வு செய்து, அடுத்த கட்ட நகர்வுகளையும் முன்னெடுக்கும்’ எனவும் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்டு கூட்டணி தொடர்ந்து 5 முறை வெற்றிப் பெற்று 25 வருடங்கள் ஆட்சி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg