Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து கார் இறக்குமதி; வரி விதிக்கத் தீர்மானம்!

In
Updated: 10:03 GMT, Mar 4, 2018 | Published: 10:03 GMT, Mar 4, 2018 |
0 Comments
1051
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து கார்கள் இறக்குமதி செய்யப்படும்போது வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

அலுமினியம் மற்றும் உருக்கு ஆகியவற்றுக்கு சுங்கவரியை அமுல்படுத்தும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி விதிக்கவுள்ளதாகவும், ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதாக, சர்வதேச ஊடகமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உருக்குக்கு 25 சதவீத வரியையும், அலுமினியத்துக்கு 10 சதவீத வரியையும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg