Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் தோல்வி: முதலமைச்சர் மாணிக் சர்க்கார் இராஜினாமா!

In இந்தியா
Updated: 10:22 GMT, Mar 4, 2018 | Published: 10:22 GMT, Mar 4, 2018 |
0 Comments
1171
This post was written by : Yuganthini

திரிபுர மாநில முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தனது பதவியை இராஜினாமா செய்வதாக கூறி மாநில ஆளுநரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.

திரிபுர மாநில சட்டசபை தேர்தலில் மாணிக் சர்க்கார் தோல்வியடைந்தமையினால், முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக கூறி மாநில ஆளுநர் ததகதா ராயை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து, இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

இதன்போது ஆளுநர், “அடுத்த முதலமைச்சரை நியமிக்கும் வரை நீங்கள் குறித்த பதவியை வகித்து அதன் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

திரிபுர மாநிலத்தில் கடந்த 25 வருடங்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சியே நடைபெற்றது. இதன்போது மாணிக் சர்க்காரே, இவ்வளவு காலமும் முதலமைச்சராக இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg