Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐநா மனித உரிமை ஆணையாளரின் சகோதரர் நாளை முகமாலை விஜயம்

In இலங்கை
Updated: 06:39 GMT, Mar 5, 2018 | Published: 00:44 GMT, Mar 5, 2018 |
0 Comments
1146
This post was written by : Arun Arokianathan

கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தின் சிறப்புத் தூதுவரான ஜோர்தான் இளவரசர் மிரெட்  அல் ஹுசேன் நாளை (செவ்வாய்க்கிழமை) முகமாலைக்குச் செல்லவுள்ளார். 

நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக  நேற்று கொழும்பு வந்த அவர், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை  முகமாலையில் பார்வையிடுவார்.

அத்துடன், வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளையும், கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்களையும் இளவரசர் மிரெட் அல் ஹுசேன் சந்திக்கவுள்ளார்.

கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம், 163 ஆவது நாடாக இணைந்து கொண்டுள்ளதை அடுத்து, இளவரசரின் இந்தப் பயணம் இடம்பெறுகிறது.

இளவரசர் மிரெட் அல் ஹுசேன், தற்போது ஐ.நா மனித உரிமை ஆணையாளராக பணியாற்றும் செய்ட் அல் ஹுசேனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg