Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியின் செயலால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பட்டதாரிகள்!

In இலங்கை
Updated: 05:09 GMT, Mar 5, 2018 | Published: 03:17 GMT, Mar 5, 2018 |
0 Comments
1091
This post was written by : Anojkiyan

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றுகூடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்தின் போது வேலையற்ற பட்டதாரிகளால் கையளிக்கப்பட்ட மகஜருக்கு, உடனடி தீர்வை பெற்றுத்தந்தமைக்காகவே அவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காந்திபூங்காவில் ஒன்றுகூடி ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சிவகாந்தன் கருத்து தெரிவிக்கையில்,

“ஒட்டுமொத்த பட்டதாரிகளுக்கும் ஜனாதிபதி நல்ல முடிவினை அறிவித்துள்ளார். இது பட்டதாரிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

தொடர்ச்சியாக தொழில் உரிமைக்காக மேற்கொண்ட போராட்டத்திற்கான ஒரு வெற்றி. ஜனாதிபதி தந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவேண்டும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg