Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்த சீனா தீர்மானம்!

In விளையாட்டு
Updated: 05:38 GMT, Mar 5, 2018 | Published: 05:38 GMT, Mar 5, 2018 |
0 Comments
1170
This post was written by : Anojkiyan

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்த தீர்மானித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

பீஜிங்கில் நடைபெற்ற 13ஆவது தேசியக் குழுவின் முதல் கூட்டத்தில், சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் உறுப்பினர் யங் யங் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “எமக்கு இரண்டு இலக்குகள் உள்ளன. முதலாவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் முழுமையான ஈடுபாட்டுடன் போட்டியிட வேண்டும். இரண்டாவது எமது மேலாதிக்கத்திற்காகவும், ஒப்பீட்டளவில் அதிகளவான தங்கப்பதக்கங்களை பெற்றுக் கொள்ளவும் நிச்சயமாக போராட வேண்டும்.

2022 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு கடந்த ஆண்டு தடகள ஆணையகத்தை நிறுவியது. 21 உறுப்பினர்கள் கொண்ட குழு குளிர்கால ஒலிம்பிக் தயார்படுத்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனர், சுமார் 300 மில்லியன் பார்வையாளர்கள் வரையில் இந்த போட்டிகளை பார்வையிடுவர் என எதிர்பார்க்கின்றோம், அரங்குகள் அனைத்தையும் சிறந்த முறையில் அமைப்பதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர். மொத்தத்தில் இந்த போட்டிகளை சிறப்பாக நடத்த சீனா எதிர்பார்த்துள்ளது’ என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg